தமிழகம்

சின்னமலை - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும்

செய்திப்பிரிவு

சின்னமலை விமானநிலை யம், ஆலந்தூர் பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள் ளது.

இது தொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ உயர்த்தப்பட்ட வழித்தடத் தில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது குறிப் பிடத்தக்கது. சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலுமான மீதமுள்ள உயர்த்தப்பட்ட வழித்தடங்களிலும் பயணிகள் சேவைகள் விரைவில் தொடங்கும்.

நடப்பாண்டு இறுதிக் குள், முதலாவது சுரங்க வழித் தடத்தில் பயணிகள் சேவை தொடங்கப்படும்.

வண்ணாரப் பேட்டையி லிருந்து திரு வொற்றியூர் - விம்கோ நகர் வரையில், ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் வழித்தடத்தை நீட்டிப்பதற்கு மத்திய அரசிடமி ருந்து பெறப்பட்ட ஒப்புதல், முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

கடனுதவி

இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடனுதவி சுழற்சித் திட்டத்தில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், 104.50 கி.மீ நீளமுள்ள இரண்டு வழித்தடங்களை உள்ள டக்கிய மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான திட்ட அறிக்கையை விரைவில் தயாரித்து தமிழக அரசு செயலாக்கத்துக்கு கொண்டு வரும்.

SCROLL FOR NEXT