தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை (பென்ஷன்) தொடர்ந்து வழங்கப்பட்டு வருவ தாக சட்டப்பேரவையில் வரு வாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று திருத்திய பட்ஜெட் மீதான விவாதம்:
கே.ஜெ.பிரின்ஸ் (காங்கிரஸ்) :
வறுமை ஒழிப்பு திட்டத்தில் முதியோர் ஓய்வூதிய திட்டம் முதலிடம் பெறுகிறது. இந்த திட்டத்தில் பாரபட்சம் உள்ளது. அம்மா திட்டத்தின் மூலம் பெறப் படும் விண்ணப்பங்களுக்கு வழங் கப்படுவதில்லை. இத்திட்டத்தில் தடைகள் உள்ளன. அதிகாரி களும் தகுதியானவர்கள் கேட் டாலும் விதிகள் இல்லை என கூறுகின்றனர்.
வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:
முதியோர் ஓய்வூதியம் திட்டம் மூலம் தகுதியானவர்களுக்கு ரூ.ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 9 வகை திட்டங்களில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு 3 திட்டங்களுக்கு ரூ.200, 300, 500 என நிதி அளிக்கிறது. ஆனால், நாங்கள் 9 திட்டங்களுக்கும் ரூ.ஆயிரம் அளிக்கிறோம். ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிகளை தளர்த்தி சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் என இருந்த நிலையில் ரூ.50 ஆயிரம் வரை இருந்தாலும் வழங்கப்படுகிறது. மகன், மகள் இருந்தால் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என விதி உள்ளது. இதற்காக கிராம சபை கூட்டங் கள் மூலம் அவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் கொண்டுவந்து நிதி அளிக்கிறோம். தகுதியுடை யவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கி வரு கிறோம். தவறானவர்கள் பயன டைந்துவிடக் கூடாது என்பதற் காக ஸ்மார்ட் கார்டு தி்ட்டம் அறி முகப்படுத்தப்பட்டு, 85 சதவீதம் பணிகள் முடிக்கப்பட் டுள்ளன. ஆதார் இணைப்புப் பணிகளும் 75 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்:
கடந்த 10 நாட்களுக்கு முன் முதல்வர் தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இது போல் ஒவ்வொரு தொகுதியிலும் நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படுமா?
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்:
வருவாய் கிராமங்களில் மக் களை தேடிச் சென்று சேவை யளிக்கும் அம்மா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் ஓய்வூதியமாக ரூ.500 வழங்கப்பட்டது. தற் போது இது ரூ.ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் இறுதியில் 14 லட்சமாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை 21 லட்சமாக உயர்ந்தது. தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியை விட ரூ.3 ஆயிரம் கோடி அதிக மாக, ரூ.4 ஆயிரத்து 600 கோடி இத்திட்டத்துக்காக ஒதுக்கப் படடுள்ளது.
பிரின்ஸ் (காங்கிரஸ்)
: சட்டப் பேரவை உறுப்பினர்களாக இருக் கும் நாங்கள், தகுதியானவர் களுக்கு பரிந்துரைக்கடிதம் அளித்தால், அதை ஏற்பார்களா? உதவித்தொகை வருமா?
அமைச்சர் உதயகுமார்:
சட்டப் பேரவை உறுப்பினர்கள், தொகுதி யில் தகுதியானவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அதிகாரிகளிடம் அளிக்க வேண் டும். அவர்கள் ஆய்வு செய்து, விதிகளுக்கு உட்பட்டு வழங்குவார்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
தொடர்ந்து, பேசிய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பிரின்ஸ், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பேருந்துகள் கூடுதலாக ஒதுக்க வேண்டும், மீனவர்கள் பாது காப்புக்காக கடலோர கிரா மங்கள் உள்ள பகுதிகளில் தடுப்புச்சுவர்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசுக்கு வைத்தார்.