தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் 2 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், முக்கிய நிர்வாகிகள் நீக்கம், மாநில பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றை அதிமுக தலைமை மேற்கொண்டிருக்கிறது.
திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.முத்துக்கருப்பன், புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முருகையாபாண்டின் ஆகியோர் அப்பொறுப்புகளில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக மாநகர் மாவட்டச் செயலாளராக பாப்புலர் முத்தையா, புறநகர் மாவட்டச் செயலாளராக மாவட்ட ஊராட்சி தலைவர் பா.நாராயணபெருமாள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்த முத்துக்கருப்பனின் மகன் ஹரிஹரசிவசங்கர் அப்பொறுப்பி லிருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிதாக அப்பொறுப்புக்கு யாரும் நியமிக்கப் படவில்லை.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளரான, விஜிலா சத்தியானந்த் எம்.பி., மாநில மகளிரணி செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் சுதா பரமசிவன், தற்போது மாநில அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
5 தொகுதிகளில் தோல்வி
இந்த மாற்றங்கள் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரேநேரத்தில் 2 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத் தில் உள்ள 10 தொகுதிகளில் 5-ல் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும் ராதாபுரம், தென்காசி தொகுதி களில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக வெற்றி பெற்றது.
வேட்பாளர்கள் புகார்
தேர்தல் பணிகளை சரிவர மேற்கொள்ளாமல், மாவட்டச் செயலா ளர்கள் அலட்சியமாக இருந்ததாக, தோல்வியடைந்த வேட்பாளர்கள் தலைமையிடம் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து கடந்த சில வாரங்களாக மேற்கொண்ட ஆய்வுக்குப்பின்னரே நிர்வாகிகளை மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பரிசும் உண்டு
ராதாபுரம் தொகுதியில் 3 முறை வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் மு.அப்பாவு, அங்கு தோல்வி அடை வதற்கு அங்கு தேர்தல் பணியாற்றிய நாராயண பெருமாளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோல்தான் சிறப்பான தேர்தல் பணிக்காக விஜிலா சத்தியானந்த் எம்.பி. மாநில மகளிரணி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.