தமிழகம்

நிதி ஆதாரங்களை பெருக்க நடவடிக்கை: தாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் - ஆளுநர் உரையில் தகவல்

செய்திப்பிரிவு

நிதி ஆதாரங்களை பெருக்கும் வகையில் தாது மணல் விற் பனையை அரசே நேரடியாக ஏற்று நடத்தும் என்றும், இதற்காக புதிய கிரானைட் கொள்கை வகுக்கப் படும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் உரை யில் கூறப்பட்டு இருப்பதாவது:

நோக்கியா மற்றும் அதற்கான உபபொருட்களை உற்பத்தி செய் யும் நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க இந்த அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் அண்மையில் பாக்ஸ்கான் உள்ளிட்ட சர்வதேச தொழில் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை தைவா னுக்கு அனுப்பிவைத்தார்.

மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு அந்த அரசின் மிக உயர்மட்ட அளவில் அணுகி சுமூகத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. சென்னை-பெங்களுரூ மற்றும் மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடங்கள் உள்ளிட்ட தொழில் மேம்பாட்டு வழித் தடங்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச் சிக்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பொன்னேரி தொழில் முனையம்

சென்னை - பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக பொன்னேரியை துடிப்பான தொழில்முனையமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு மாநில அரசுக்கான நிதி ஆதாரங் களை பெருக்க, புதிய கிரானைட் கொள்கையை வகுக்கவும், தாது மணல் விற்பனையை நேரடியாக அரசே ஏற்று நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைப்பு சார்ந்த பிரிவில் கணிசமான அளவில் வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. தொழில்துறையின் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இத்துறையில் நாட்டிலேயே அதிகமான தொழிற்சாலைகளும் அதிகமான தொழிலாளர்களும் தமிழகத்தில்தான் உள்ளனர்.

புதிய தொழில்முனை வோரையும், புதுமையான தொழில் முயற்சிகளையும் ஊக்குவிக்க தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு புதிய தொழில்முனைவோர் - தொழில் நிறுவன மேம்பாட் டுத் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும். தொழில்முனைவோர் அமைப்புகள் தனியாகவோ அல்லது சிட்கோ வுடன் இணைந்தோ புதிய தொழிற்பேட்டைகளை நிறுவுவ தற்கான நிதியுதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT