தமிழகம்

சாமளாபுரத்தில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல்: காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்- வட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

செய்திப்பிரிவு

திருப்பூர் சாமளாபுரத்தில் மது பானக்கடைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத் திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டம் நேற்று தொடங் கியது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: திருப் பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் கடந்த ஏப். 11-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரி என்பவரை ஏடிஎஸ்பி ஆர்.பாண்டியராஜன் தாக்கினார். இதில் அவரது செவித் திறன் பாதிக்கப்பட்டது. இச்சம்பவத் தில் போலீஸார் நடத்திய தடியடி தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் ஆர். பாண்டியராஜனுக்கு ஈரோடு சிறப்பு அதிரடிப்படை காண்காணிப் பாளராக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. தாக்கிய போலீஸ் அதிகாரி மீது எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. பொதுமக் களை தாக்கிய போலீஸார் மீதும் நடவடிக்கை இல்லை. இச்சம்ப வத்தில் பொதுமக்கள் மீது போடப் பட்ட பொய்வழக்கை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டுள்ளோம்.

திருப்பூர் முன்னாள் ஆட்சியர் ச.ஜெயந்தி அளித்த உத்தரவின்படி சாமளாபுரம் பேரூராட்சியில் எங்கும் மதுபானக்கடை திறக்க அனுமதியளிக்கக் கூடாது. ஆனால், காளிபாளையத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு இடையூறாக விளைநிலத்தில் விதிமுறைகளை மீறி கடை திறக்கப்பட்டுள்ளது என்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு பந்தல் அமைக்க போராட்டக்காரர்கள் முயன்றனர். அதற்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மங்கலம் போலீ ஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் வெயிலில் உட்கார்ந்து அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

பல்லடம் வட்டாட்சியர் ஆர்.எஸ். சாந்தியை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முற்றுகையிட்டு கூறியதாவது:

பொதுமக்களின் மீதான தாக்கு தலுக்கு பிறகு, சாமளாபுரம் பேரூ ராட்சியில் டாஸ்மாக் கடை அமைக்க மாட்டோம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் காளிபாளை யம் கிராமத்தில் விதிமுறைகளை மீறி, டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமங்களில் பலரும் மதுப்பழக் கத்துக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 10 நாட்களாக குடும்பங்களில் நிம்மதி இல்லை. ஆகவே கடையை போர்க்கால அடிப்படையில் அகற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றனர்.

SCROLL FOR NEXT