ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளர் கங்கை அமரனை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகரில் அதிமுகவின் இரு அணிகள் மற்றும் திமுக வேட்பாளர்கள் பணம் பட்டுவாடா செய்து வருகிறார்கள். ஆர்.கே.நக ரில் எங்கு சென்றாலும் இந்த 3 வேட் பாளர்களின் ஆதரவாளர்கள் பணம் கொடுப்பதை பார்க்க முடி கிறது. இதனை தடுக்க வேண்டிய காவல் துறை அச்சப்பட்டு அமைதியாக இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தை பாஜக இயக்குவதாக கூறுவது கண்டிக் கத்தக்கது. தேர்தல் ஆணையத் தின் மீது நாங்களே குற்றம்சாட்டி வருகிறோம். அதிமுகவுக்கு தேர் தல் ஆணையம் தடை விதித்துள் ளது. ஆனால், இரு அணிகளும் அதிமுக கொடியைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இரு அணிகளுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதையே இது காட்டுகிறது. மக்களை ஏமாற்று வதற்காக இவர்கள் நாடகம் நடத்துகிறார்கள்.
தமிழக அமைச்சர் விஜயபாஸ் கர், நடிகர் சரத்குமார் உள்ளிட் டோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத் தியதற்கு மத்திய அரசு காரணம் அல்ல. வருமான வரித்துறையினர் தங்களது வழக்கமான கடமையை செய்துள்ளனர். தென்னிந்தியர்கள் பற்றி இனவெறியுடன் பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தான் பயன்படுத்திய வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் எல்லோரும் சமமாக வாழ்கிறோம் என்றுதான் தருண் விஜய் கூறியிருக்கிறார்.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.