திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தை சேர்ந்தவர் பி.எச். பாண்டியன். சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
எம்ஜிஆர் விசுவாசியான இவர் கடந்த 1977, 1980, 1984-ம் ஆண்டுகளில் சேரன்மகாதேவி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் னர் அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக பிரிந்தபோது ஜானகி அணியில் இருந்தார். அந்த அணியில் சேரன் மகாதேவி தொகுதியில் 1989-ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏவும் இவர்தான்.
எம்ஜிஆர் கால அதிமுகவில் 1980 முதல் 1985 வரை தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவர், 1985 பிப்ரவரி 27 முதல், 1989 பிப்ரவரி 5-ம் தேதி வரை தமிழக சட்டப் பேரவை தலைவராக இருந்தார். 1999-ல் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனார்.
ஊட்டி பிளசெண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றை தொடக்க நிலை யில் பிஎச்.பாண்டியனும், அவரது மகன் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியனும் கவனித்து வந்தனர். ஜெயலலிதா தொடர்புடைய இன்னும் சில வழக்குகளிலும் இவர் எடுத்த கவனத்தால் ஒரு கட்டத்தில் இவரை அதிமுகவின் சட்ட ஆலோசகராக ஜெயலலிதா நியமித்தார்.
மனோஜ் பாண்டியன்
இவரது மகன் மனோஜ் பாண் டியன் அதிமுக வழக்கறிஞர் பிரி வில் மாநிலச் செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராக வும் நியமிக்கப்பட்டிருந்தார். 2001-ல் சேரன்மகாதேவி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்று இருந்தார்.
சிந்தியா பாண்டியன்
பி.எச்.பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் திரு நெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தார். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலின்போது சிந்தியா பாண்டியனுக்கு தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா அளித்திருந்தார். ஆனால், சிந்தியா பாண்டியன் வெற்றி பெறவில்லை. இவரது மற்றொரு மகன் அரவிந்த் பாண்டியன் கூடுதல் அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார்.