தமிழகம்

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்: விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு

செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 2-வது நாளாக நேற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணி யரசன் தலைமையில் நூற்றுக் கணக்கான விவசாயிகள், பெண் கள், மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் இக்கோரிக்கைக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற் றுள்ளனர். காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அழுத் ததையும் மீறி, நேற்று முன்தினம் இரவும் போராட்டம் நடைபெற்றது.

நேற்றும் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த விவசாயிகள், தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தை கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

மெரினாவில் நடந்த ஜல்லிக் கட்டு ஆதரவு போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றதுபோல, இந்தப் போராட்டத்திலும் அனைவரும் பங்கேற்க, சமூக ஊடங்கள் வழியாக அழைப்பு விடுத்தனர்.

இளைய தலைமுறை ஆர்வம்

சென்னை ஆவடியில் வசிக்கும் சுப்பிரமணியன், மங்களகிரிஜா தம்பதியரின் மகளான புதுமொழி, கோவையில் பி.டெக். படித்து வருகிறார். மகன் புதியவன், ஆவடி யில் பிளஸ் 2 படித்து வருகிறார். தமிழ் ஆர்வலரான தாத்தா கோவிந்தராஜின் தாக்கத்தால், முதல்முறையாக மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட் டத்தில் பங்கேற்ற இவர்கள், தொடர்ந்து தஞ்சையில் நடை பெறும் போராட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து தாத்தா கோவிந்தராஜுடன் வந்திருந்தனர்.

இதுகுறித்து புதுமொழி கூறும் போது, “தமிழ்நாட்டின் நலன் சார்ந்த அனைத்து போராட்டங்களிலும் தாத்தா பங்கேற்பார். அவரைப் பின்பற்றி எனது தாய், தந்தை யும் போராட்டங்களில் பங்கேற்ற னர். இவர்களின் தாக்கத்தால், நாங்களும் இப்போது போராட்டங் களில் பங்கேற்று வருகிறோம்.

தமிழக விவசாயிகள், ஒவ்வொன் றையும் போராடியே பெற வேண்டி யுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். அந்த மாற்றத்தை உருவாக்குவதில் எங்களைப் போன்றவர்களுக்கும் பங்கு உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT