சூடாமணி நினைவு அறக்கட்டளை சார்பில் பிரபல தமிழ் எழுத்தாளர் சூடாமணியின் 2-வது சிறுகதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை மியூசிக் அகாடெமியில் 3-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது.
சூடாமணியின் 60 சிறுகதைகள் அடங்கிய, ‘இன்னொரு முறை’ என்ற 2-வது சிறுகதைத் தொகுப்பு கவிதா பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. ‘தி இந்து’ குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் இந்நூலை வெளியிடுகிறார்.
சூடாமணி 600-க்கும் மேற்பட்ட சிறுகதை களை எழுதியுள்ளார். அவரது சிறுகதை களில் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 7 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே நாடகமாக உருவாக்கப்பட்டுள்ளது. நூல் வெளியீட்டு விழாவை ஒட்டி அந்த நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. மெட்ராஸ் பிளேயர்ஸ் என்னும் அமைப்பு உருவாக்கியுள்ள இந்த நாடகத்தைக் காண அனுமதி இலவசம்.
சூடாமணி நினைவு அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.