பாஜக கூட்டணியில் மதிமுக சேரும் முடிவை வைகோ கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பெரியார், அண்ணா வழிவந்த ம.தி.மு.க. செயலர் வைகோவுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.
எந்தக் காரணத்தைக்கொண்டும் வகுப்பு வாத சக்திகளை ஊக்கப்படுத்த வேண்டும். மதவாத சக்திகளை தமிழகத்தில் வேர்கொள்ளச் செய்ய வேண்டாம். தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.
மேலும், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், தமிழகத்தில் வகுப்புவாத சக்திகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.