தமிழகம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தூசி படிந்துள்ள 10 ஆயிரம் நூல்கள்: திறப்புவிழாவுக்குப் பிறகு செயல்படாத அவலம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த பிரம்மாண்ட உலக தமிழ் சங்கக் கட்டிடம், இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வராததால் தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் ஏமாற்றம் அடைந்துள் ளனர்.

கடந்த 1981-ம் ஆண்டு, மது ரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ்ச் சங்க மாநாட்டில் , மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், இங்கு உலக தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப்படும் என்றார். அவர் அறிவித்தப்படி 1986-ம் ஆண்டு மதுரையில் உலக தமிழ் சங்கத்தை தொடங்கினார். இந்த உலக தமிழ்ச் சங்கத்துக்காக கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை சட்டக் கல்லூரி அருகே 14.15 ஏக்க ரில் ரூ. 25 கோடியில் பிரம்மாண்டக் கட்டிடம் கட்டப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு, சில நாட்க ளுக்கு முன் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் இக்கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இந்தக் கட்டிடத்தில் 400 பேர் அமரும் கலையரங்கம், நிர்வாகப் பிரிவு, நூலகம், ஆய்வுப் பிரிவு, வகுப்பறைகள், கருத்தரங்கு அறை, நிர்வாகக் குழு, பொதுக்குழு கூட்ட அரங்கு மற்றும் விருந்தினர்கள் தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடம், சோழ நாட்டு கட்டிடக் கலைப் படி பாண்டிய நாட்டுச் சிறப்புடன் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற் றும் வகையில் கட்டப்பட்டுள்ள து. இந்த கட்டிடத்தில் இன்னும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதி கள், பணிகளுக்காக மேலும் ரூ. 75 கோடி வரை நிதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்டக் கட்டிடம் திறப்புவிழா கண்டும், இன்னும் முழு செயல்பாட்டுக்கு வரவில்லை. சொற்ப அளவிலான பணியாளர் களுடன் கடிதப் போக்குவரத் து, நிர்வாகப் பணிகள் மட்டுமே தற்போது உலக தமிழ்ச்சங்கத்தில் நடைபெறுகிறது. தமிழ் வளர்ச்சி, மேம்பாட்டுக்கான ஆக்கபூர்வ நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.

இங்குள்ள நூலகத்தில் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் படிப் பதற்காக 10 ஆயிரம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால், அனைத்து நூல்களும் தூசி படிந்து காணப்படுகின்றன.

திறப்புவிழா கண்ட நாள் முதல் தற்போது வரை தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற கருத்தரங்கு, சொழ்பொழிவுகள், பயிலரங்குகள் எதுவும் நடக்கவில்லை.

இதுகுறித்து தமிழ் ஆர்வலர் கள் கூறியதாவது: உலக நாடு களில் இயங்கிவரும் அனைத்து தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள், தமிழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் கல்வி நிறுவனங்கள், தமிழ் அமைப்பு களை ஒரு குடையின் கீழ் பதிவு செய்து, வெளிநாடுகளில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய செய்திகளை பரப்புதல், தமிழர்கள் பெரும் எண்ணிக்கை யில் வாழும் அயல்நாடுகளுக்கு தமிழ் ஆய்வாளர்களை அனுப்பி தமிழ்மொழி, பண்பாடுகளை ஆய்வு செய்தல் உள்ளிட்டவை உலக தமிழ் சங்கத்தின் முக்கியப் பணியாக இருக்கிறது. உலக நாடுகளில் உள்ள பல்கலைக் க ழகங்களில் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சி மையம் அமைப்பதை யும் நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், அதற்கான அதிகாரிகள், பணியாளர்கள் உலக தமிழ்ச் சங்கத்தில் இல்லை.

தற்போதுள்ள உலக தமிழ்ச்சங் கக் கட்டிடத்தில் துணை இயக்கு நர் அந்தஸ்தில் அதிகாரி ஒருவரின் கீழ் 20 பேர் மட்டுமே பணிபுரிகின் றனர். உலக தமிழ்ச்சங்கம் முழுமையாக செயல்பட இன்னும் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் தேவைப்படுகின் றனர் என்றனர்.

இதுகுறித்து உலக தமிழ்ச் சங்க அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நடத்தப்படவில்லை. வருகிற ஜூன் 2-ம் தேதி முதன்முறையாக மலேசியாவில் இருந்து 32 தமிழ் அறிஞர்கள் , ஆசிரியர்கள் மதுரை உலக தமிழ் சங்கத்துக்கு வருகை தர உள்ளனர். அவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு அன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. புதிய பணியாளர்கள் நியமனத்துக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிதாக ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட மூன்று துறைகள் உருவாக்கப்படுகிறது. படிப்ப டியாக உலகத் தமிழ்ச் சங்கம் முழுமையான செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்றனர்.

சமீபத்தில் திறப்புவிழா கண்ட உலக தமிழ்ச் சங்கக் கட்டிடம்.

SCROLL FOR NEXT