தமிழகம்

மாணவி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள்: கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் சின்னதாராபு ரம் அருகே பள்ளி மாணவியை கொலை செய்த வழக்கில் இளை ஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள அரங்கபாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகள் பாரதி ப் ரியா(14). சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் (25), ஈஸ்வரனுடன் கொத்தனார் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

பாரதிப்ரியாவை திருமணம் செய்துக்கொள்ள மனோஜ்குமார் விரும்பியுள்ளார். ஆனால், பார திப்ரியா மறுக்கவே, 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி பள்ளிக்கு செல்வதற்காக அரங்க பாளையத்தில் இருந்து சின்னதா ராபுரத்துக்கு சைக்கிளில் சென்ற அவரை கத்தியால் குத்திவிட்டு, மனோஜ்குமார் தன்னைத்தானே குத்தி காயப்படுத்திக்கொண்டார். இதில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாரதிப்ரியா உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, சின் னதாராபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கில், கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி எம்.குணசேகரன் நேற்று அளித்த தீர்ப்பில், கொலைக் குற் றத்துக்காக மனோஜ்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT