நெடுவாசல் போராட்டத்தில் பங் கேற்ற சேலம் மாணவியை கைது செய்ய நேற்று போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற் பட்டது.
ஹைட்ரோ கார்பன் திட்டத் துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 2-ம் கட்டமாக போராட்டம் நடை பெற்று வருகிறது. 70-வது நாளான நேற்று, வேற்றுக் கிரகவாசிகளிடம் செடிகள் மனு கொடுப்பதைப் போல நூதன போராட்டம் நடை பெற்றது. இதற்காக விவசாயிகள், உடலெங்கும் விபூதியை பூசிக் கொண்டு வேற்றுக் கிரகவாசி களாக நடித்தனர்.
போலீஸ் குவிப்பு
இதற்கிடையே, நெடுவாசல் போராட்டத்தில் நேற்று முன்தினம் பொதுநல மாணவர் எழுச்சி இயக் கத்தைச் சேர்ந்த வளர்மதி(சேலம்), மணிவேல்(மதுரை) ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், இருவரும் அங்கேயே தங்கியிருந்தனர்.
வெளியேறிய மாணவி
இதையடுத்து, அவர்கள் இரு வரையும் கைது செய்வதற்காக நெடுவாசலில் நேற்று ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையறிந்த வளர்மதி, மணிவேல் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மாணவியை கைதுசெய்ய திடீரென போலீஸார் குவிக்கப் பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சேலத்தில் இருந்து பாலக்காடு ரயிலில் வந்த வளர்மதி உள்ளிட்ட 7 பேரை கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.