தமிழகம்

சென்னையில் கடத்தப்பட்ட இளம்பெண் 4 மணி நேரத்தில் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை அருகே காரில் கடத்தப்பட்ட திருமணமான இளம்பெண்ணை போலீஸார் 4 மணி நேரத்தில் மீட்டனர். இது தொடர் பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் அத்தாணி காரதோட்டம், கருவல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னி மலை. இவரது மகள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ரமேஷ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளார்.

இதையறிந்த அப்பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், வீட்டை விட்டு வெளியேறிய அப்பெண், சென்னை மாங்காடு கோயிலில் கடந்த ஜூலை 5-ம் தேதி ரமேஷை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், நேற்று காலை திருவேற்காடு பகுதியில் உள்ள கடைக்கு அப்பெண் தனது கணவருடன் நடந்து சென்றார். அப்போது, அப்பெண்ணின் உற வினர் நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் காரில் அங்கு வந்தனர். அவர்கள் ரமேஷை தாக்கிவிட்டு, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் தெரிவித்தார். இதைய டுத்து, இளம்பெண்ணை கடத்திச் சென்ற காரை மடக்கிப் பிடிக்க சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சா லையில் வேலூர் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். ஆம்பூர் புறவழிச் சாலையில், தாலுகா காவல் ஆய்வாளர் ஜோகிந்தர் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட் டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை யிட்டனர். அதில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில், அப்பெண் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை போலீஸார் மீட்டனர்.

பின்னர் காரில் இருந்த நந்தகுமார், அவரது நண்பர்க ளான ஈரோட்டைச் சேர்ந்த சித் தேஸ்வரன், கணபதி, சந்தோஷ் குமார், கருப்பண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT