மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரைக் காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையில் 2011-ஆம் ஆணடுபோதைப் பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு ராமேஸவ்ரம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யபப்ட்டு, இலங்கை நீதிமனற்த்தில் வழக்கு நடந்தது. இந்த தகவல் எனக்கு கிடைத்து உடனடியாக டெல்லிக்கு சென்று அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தேன்.
மூன்றாவது முறையாக இப்பிரச்சினை குறித்து சந்தித்த போது அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான ;குர்ஷித் அவர்கள் இந்திய அரசின் புலனாய்வுத்துறை மூலம் விசாரித்து, கைது செயய்ப்பட்ட மீனவாக்ளுக்கு இதில் சம்மந்தம் இல்லை என்ற தகவலை பெறறு அது இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டதாக என்னிடம் சொன்னார்.
நேரடியாக நானும் இவர்களுக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுடனும் இலங்கையின் தமிழ் அமைச்சர்களுடன் இது சம்மந்தமாக நான் பேசினேன். பாதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களின ;குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலும், உதவியும் செய்தோம். ஒரு வழக்கில், அதுவும் போதை பொருள் வழக்கில் ராமேஸவ்ரம் மீனவர்கள் 5 பேரும், இலங்கை மீனவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, அது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிற போது சட்டத்திற்கு உட்பட்டு எதை செய்ய முடியுமோ அதை செய்தோம்.
ஆனால் இப்பொழுது அவர்களுக்கு வழக்கில் தண்டனை கிடைத்திருக்கிறது. தன்னுடைய தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை அதிபர் அவர்களை விடுவிக்கலாம்.
ஆகவே பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரடியாக இலங்கை அதிபருடன் பேசி மீனவாக்ளை விடுவிக்க முயற்சி எடுக்க வேணடும். 5 அப்பாவி மீனவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இதற்கு என்ன சக்தி இருக்கிறதோ, அந்த முழு சக்தியையும் நான் செயல்படுத்துவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இருகக் வேணடுமென மீனவ நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து; இந்திய பிரதமருக்கு நான் தொலைநகல் செய்தி அனுப்பியிருக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.