தமிழகம்

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணையில் முன்னேற்றம் கிடைக்குமா? - உள்ளூர் பிரமுகர்கள் கருத்து

எஸ்.விஜயகுமார்

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது தொடர்பாக உள்ளூர் பிரமுகர்கள் சிலரின் கருத்துகள்.

தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்:

விஷ்ணுபிரியா வழக்கில் சிபிசிஐடி தவறாக வழிநடத்தப்படு வதாக ஆரம்பம் முதலே நான் கூறி வருகிறேன். வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதால், தமிழக காவல்துறையை குறைத்து மதிப் பிட முடியாது. தமிழக போலீஸாரை செயல்பட விடாமல் மேலிடத்தில் உள்ள சிலர் தடுக்கின்றனர். விஷ்ணு பிரியா வழக்கில் நான்தான் முக்கிய சாட்சி. வழக்கு தொடர்பாக என்னிடம் உள்ள ஆதாரங்களை நான் சிபிஐ-யிடம் ஒப்படைப்பேன் என்றார்.

கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கை டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரித்தபோது, அவரிடம் வாக்குமூலம் அளித்த

விடுதலை சிறுத்தைகள் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் கூறியதாவது:

விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்ளவில்லை. கோகுல் ராஜ் கொலை வழக்கில் முக்கிய பெரும்புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதை அவர் கண்டு பிடித்துவிட்டார். அது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அவர் சமர்பிக்கப்போவதாக இருந்த நிலையில்தான், அவர் கொல்லப்பட்டார். மேலிடத்தில் இருப்பவர்களுக்கு விஷ்ணு பிரியா வழக்கில் தொடர்பு இருப்பதால், இதனை சிபிஐ நேர்மையாக விசாரிக்குமா? என்பது சந்தேகமே?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேலம் மாவட்ட செயலாளர் தங்கவேலு:

விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி யில் அவருக்கு அழுத்தம் கொடுத்த வர்கள் உயர் அதிகாரிகள் தான். இந்த நிலையில் போலீஸூக்கு எதிரான வழக்கில் போலீஸார் எப்படி நேர்மையாக விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும். இந்த வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணை அவசியம் தேவை.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் ஜோதிலட்சுமி:

ஓசூரில் கொள்ளையர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட காவலருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், விஷ்ணுபிரியா மரணமடைந்தபோது, இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இப்படி பாரபட்சம் காட்டும் அரசு, விஷ்ணு பிரியா வழக்கை நேர்மையாக நடத்த வாய்ப்பு இல்லை. சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது.

காவல்துறை ஓய்வுபெற்ற டிஐஜி ராமச்சந்திரன்:

விஷ்ணுபிரியா வழக்கில் சிபிசிஐடி விசாரணை நேர்மை யாகவே நடைபெற்று வந்தது. வழக்கில் புகாருக்கு ஆளானவர் கள் எஸ்பி மற்றும் உயர் அதிகாரிகள். ஆனால், வழக்கை விசாரிப்பவர்கள் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் ‘ரேங்க்கில்’ உள்ளவர்கள். எனவே, விசாரணை அதிகாரிகள், புகாருக்கு ஆளான உயர் அதிகாரிகளிடம் துணிச் சலாக நேர்மையாக விசாரிப்பார் களா? என்பது எல்லோருக்கும் எழும் சந்தேகம். ஆனால், நேர்மையான காவல்துறை அதிகாரிகள் உயர் அதிகாரியாக இருந்தாலும் துணிச்ச லுடன் விசாரணையை மேற்கொள் வர். ஒரு வழக்கில் கீழமை நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது போலவே, தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT