பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசின் திட்டத்தை எதிர்த்து இன்று அல்லது நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘பாலாற்றில் ஆந் திராவின் தடுப்பணைகள் நிறுத்தப் படவில்லை. பவானி ஆற்றின் குறுக்கில் கேரளாவின் தடுப்பணை வேலைகள் நிற்கவில்லை’’ என்றார்.
அப்போது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு பேசியதாவது:
இல்லை இல்லை என எதிர்க் கட்சித் தலைவர் கூறிக்கொண்டே போகிறார். கடந்த 2006 -11ம் ஆண்டு களில் திமுக ஆட்சியில்தான் எதுவும் இல்லை. எங்கள் ஆட்சியில் நடந்தது தொடர்பாக நாளை பதிலுரையில் கூறுகிறேன்.
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப் பணை கட்டுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங் கப்படும்வரை, எந்தப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பவானி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் தகவல் அறிந்ததும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, 6 இடங்களில் தடுப் பணை கட்ட கேரள அரசு முயற்சி எடுத்து வருவது தெரிந்தது. ஒரு இடத்தில் தடுப்பணைக்கான தளவாடப் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. முதலில் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதன்பிறகுதான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.
அதன் அடிப்படையில்தான் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், 10 நாட்களாக மத்திய அரசின் பதில் கிடைக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை வழக்கு தொடரப்படும். இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.