அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழக துறைகளில் படிக்கும் பொறியியல் மாணவர்களுக்காக பல்கலைக்கழக தொழில் கூட்டு மையம் கடந்த 6 முதல் 15-ம் தேதி வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் கேம்பஸ் இண்டர்வியூ (வளாக நேர்முகத்தேர்வு) நடத்தி வருகிறது. இதில் அக்செஞ்சர், காக்னிசன்ட், இன்போசிஸ், ஐபிஎம் ஆகிய 4 நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.
பணிக்கு தேர்வானோர் பட்டியல் 14-ம் தேதி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் எந்த நிறுவனத்தில் சேர விரும்புகிறார்கள்? என்ற விவரம் கேட்கப்படும். பின்னர் அந்த தகவல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்கட்ட கேம்பஸ் இண்டர்வியூவில் ஆண்டுக்கு ரூ.4.6 லட்சம் முதல் ரூ.17.6 லட்சம் வரையிலான சம்பளத்தில் பல்வேறு நிறுவனங்களில் ஏறத்தாழ 500 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் கேம்பஸ் இண்டர்வியூவில் 1,200 பேர் வரை கலந்துகொள்வர்.
அவர்களில் 900 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்ப தாக அண்ணா பல்கலைக்கழக தொழில் கூட்டு மைய இயக்குநர் டி.தியாகராஜன் கூறியுள்ளார்.