தமிழகம்

பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: அமைச்சர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இதனை அமைச்சர் தெரிவித்தார். மேலும், அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்த புகார்களை பதிவு செய்ய ஒரு பிரத்யேக தொலைபேசி சேவை துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பயணிகள் நலனுக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், 8350 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT