தமிழகம்

சென்னையில் தமிழர் அமைப்பு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

செய்திப்பிரிவு

சென்னையில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்துவரும் காங்கிரஸாரைக் கண்டித்து, சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழர் முன்னேற்றப் படையினர் நேற்று (புதன் கிழமை) நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சிறிது நேரம் மறியல் செய்தனர்.

இதற்கிடையில், சென்னை ஓட்டேரி, வேப்பேரி பகுதிகளில் ராஜீவ் காந்தி சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினரும் மறியலில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT