சட்டமுன்வடிவில் மாற்றங்கள் செய்து சென்னை உயர் நீதிமன்றம் என்பதற்குப் பதிலாக தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பிய கடிதத்தில், ''மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சட்டமுன்வடிவில் 'சென்னை உயர் நீதிமன்றம்' என்பதற்குப் பதிலாக 'தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி சட்டமுன்வடிவில் மாற்றங்கள் செய்து தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார்.
தனது கடிதத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் முதல்வர் ஜெயலலிதா அனுப்பியுள்ளார்.