தமிழகம்

பட்டாசு வெடித்ததால் கோயில் கோபுரத்தில் தீ: காளையார்கோவிலில் ஏற்பட்ட விபரீதம்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் கோபுரங்களில் போடப் பட்டிருந்த தென்னங்கீற்றுகளில் பட்டாசுகள், வாணவேடிக்கைகள் காரணமாக தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் கோபுரங்களும் சேதமடைந்தன.

காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் இரு கோபுரங்கள் உள்ளன. இங்கு கும்பாபிஷேகப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரு கின்றன. நேற்று மாலை ஜெய லலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த தாகக் கருதி அதிமுகவினர் சரவெடி களை பஸ் நிலையம் முன் வெடித் தனர். சிலர் கோபுர வாசல் முன்பு பட்டாசுகளையும், வாண வேடிக்கைகளையும் வெடித்தனர்.

இவற்றில் வெடித்துச் சிதறிய தீ கோபுரத்தைச் சுற்றியுள்ள தென்னங்கொட்டகை, சாரம், கூரை யில் பட்டு மளமளவென தீப்பிடித்து எரிந்தது. முதலில் ராஜகோபுரத்தில் பிடித்த தீ, பக்கத்தில் உள்ள சிறிய கோபுரத்துக்கும் பரவியது.

சிவகங்கை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துக்கொண்டிருந் தனர். தண்ணீர் பிடிப்பதற்காக அவர்கள் சென்றபோது தெய்வா தீனமாக திடீரென கோபுரங்களைச் சுற்றி மட்டும் பெய்த மழை தீயை அணைத்தது.

தீ விபத்துக்கு கண்டனம் தெரி வித்தும், அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்யத் தொடங் கியதால் மக்கள் கலைந்து சென்றா லும், மக்களுக்கு ஆதர வாக வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர். மேலும் கலவரம் ஏற் படும் சூழல் ஏற்பட்டது. அதிமுக எம்.பி. பி.ஆர்.செந்தில்நாதன், பொதுமக்களையும் வியாபாரி களையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

SCROLL FOR NEXT