தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கே.மோகன் வெளியிட்ட அறிக்கை:
ஆரணி, உத்தண்டி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் வணிகர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோ திகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எங்கள் அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் காவல் துறை தலை வரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், ‘திருவண்ணா மலை மாவட்டம் ஆரணியில் முருகன் துணிக் கடையில் துணி எடுத்த சிலரிடம் உரிமையாளர் கணேஷ் பணம் கேட்டபோது, சமூக விரோதிகள் அவரையும், அவரது தாயாரையும், ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். இதேபோல், வேம்புலியம்மன் கோயில் திருவிழாவில் கடை போட்டிருந்த வெளியூர் வியா பாரிகள் மாமூல் தர மறுத்ததால் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டது. நகைக் கடை ஒன்றில் நகை வாங்கி விட்டு ஒரு சிலர் தகராறு செய்துள்ளனர். ஆரணி யில் இதுபோன்ற குற்றச் சம்ப வங்கள் அடிக்கடி நடக்கின்றன.
மேலும், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கணேச விலாஸ் உரிமையாளர் ஜி.மாரிமுத்துவும், காஞ்சிபுரம் மாவட்டம் உத்தண்டி யில் நகை அடகுக்காரர் ஒருவரும் சமூக விரோத சக்திகளால் தாக்கப் பட்டுள்ளனர்.
இது வணிகர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத் தியுள்ளது. எனவே, மேற்படி வன்முறை சம்பவங்களில் ஈடு பட்ட சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.