எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன் னிட்டு அவரது படத்துக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ் ணனின் தம்பி என். எஸ்.திரவியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
ஒருதாய் மக்கள்
மறைந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனை நாடகத்திலும் திரையுலகிலும் எம்.ஜி.ஆர். தனது வழிகாட்டியாகக் கொண்டிருந் தார். என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் என்.எஸ்.திரவியம்(96). எம்.ஜி.ஆர். நடித்த ‘ஒரு தாய் மக்கள்’ திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் எம். ஜி. ஆருடன் ஜெயலலிதா, முத்துராமன், அசோகன், பண்டரிபாய், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை என். எஸ். திரவியம் மற்றும் அவரது மைத்துனர் டி. ஏ. துரைராஜ் ஆகியோர் தயாரித்தனர்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட என். எஸ். திரவியம் (96) எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அனகாபுத்தூர் நகராட்சி முன் னாள் தலைவர் பாரதிகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மறக்க முடியாத மனிதர்
எம்.ஜி.ஆரை வைத்து ‘ஒருதாய் மக்கள்’ படம் தயாரித்தது குறித்து ‘தி இந்து’விடம் என். எஸ். திரவியம் நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது, “படம் தயாரிக்க இருப்பதாக எம்.ஜி.ஆரிடம் விருப்பத்தை தெரிவித்தேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த சமயங்களில் ஏராளமான படங்களில் நடித்தாலும் எங் களுக்கு கால்ஷீட் ஒதுக்கினார். படத்தை சரியான காலத்துக்குள் முடித்து கொடுத்தார். படம் முடிந்த பிறகே சம்பளத்தை பெற்றுக்கொண்டார். எனது அண்ணன் என்.எஸ்.கிருஷ்ணன் மீது எம்.ஜி.ஆர். மிகவும் பாசமாக இருந்தார். எனது அண்ணன் மீது அவருக்கு இருந்த பாசத்தால் எம்.ஜி.ஆர். படத்தை தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு, எங்கள் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். என்னால் மறக்கமுடியாத மனிதர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர்’’ என்றார்.