எம்.பி. அப்துல்ரகுமானிடம் பேசினோம். “சென்னை -பெங்களூரு புதிய ஆறு வழிச்சாலைத் திட்டத்தில் மத்திய அரசிடம் பேசி 12 இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி வாங்கியுள்ளேன். வாணியம்பாடி புத்தூர் ரயில்வே மேம்பாலம் ரூ.19 கோடியில் பணிகள் நடக்கிறது.
வேலூரில் விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.5 கோடி, இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு ரூ.15 கோடி நிதி தயாராக உள்ளது. நேத்ராவதி - பாலாறு இணைப்புத் திட்டம் மூலம், அரபிக் கடலில் கலக்கும் 2000 டி.எம்.சி. தண்ணீரில் 100 டி.எம்.சி. தண்ணீரைப் பாலாற்றில் விடும் திட்டத்துக்காக மத்திய அரசு விரைவில் ஆய்வு நடத்தும். இதற்கு, கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது” என்றார் அவர்.