தமிழகம்

28 மீனவர்கள், 138 படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் அப் பாவி தமிழக மீனவர்கள் துன்புறுத் தப்பட்டு சிறையில் அடைக்கப்படு வதற்கு மத்திய வெளியுறவுத் துறை வாயிலாக கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 28 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 61 நாட்களாக நீண்ட மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் சமீபத்தில்தான் மீன்பிடித் தொழிலைத் தொடங்கி யுள்ளனர். அதன்பிறகு இதுவரை 3 படகுகளில் சென்ற 17 அப்பாவி தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர் களது படகுகளும் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன. இதில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த 21-ம் தேதி சென்ற 8 மீனவர்கள், பாக் நீரிணை பகுதியில் 23-ம் தேதி நள்ளிரவு இலங்கை கடற்படையின ரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது காங்கேசன் துறையில் சிறை வைக்கப் பட்டுள்ளனர்.

அப்பாவி தமிழக மீனவர்கள் அவர்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் இலங்கை கடற்படையின ரால் துன்புறுத்தப்பட்டு, கடத்தப் பட்டு சிறையில் அடைக்கப்படும் துயரச் சம்பவங்கள் தொடர்கின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து நானும் இதுகுறித்து பலமுறை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்வதால் மீனவர்கள் பயந்து, மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை யில் உள்ளனர். இலங்கை கடற் படையினரின் இந்த நடவடிக்கை களை எதிர்த்து தமிழக மீனவர் கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

28 மீனவர்கள், 138 படகுகள்

மீனவர்கள் கைது மற்றும் தாக்கப்படுவது குறித்து தமிழக அரசு தொடர்ந்து முறையிட்டு வரும் நிலையில், இதுவரை எவ்வித முடிவும் காணப்படவில்லை. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய, தமிழக அரசுகள் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, இதுபோன்ற சம்பவங்கள் ஊறுவிளைவிப்பதாக உள்ளன.

எனவே, இலங்கை கடற்படை யினரின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு மத்திய வெளியுறவுத் துறைக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். இலங்கை அரசுடன் பேசி, 28 மீனவர் கள், 138 படகுகளை விரைவாக விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT