கர்நாடக - தமிழக எல்லையில் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக் கப்பட்டிருந்த பேருந்து உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து இரு தினங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க எல்லையில் இரு மாநில போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செட்டிபட்டியைச் சேர்ந்த வர் பழனி (40). அவர் கடந்த 21-ம் தேதி கர்நாடக எல்லைக்கு உட்பட்ட அடிப்பாலாறு எனும் இடத்தில் குண்டடிபட்டு, வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கிராம மக்கள் தமிழக - கர்நாடக எல்லையில் வனத்துறையினருக்கு சொந்த மான சோதனைச் சாவடியை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இச்சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
அதையடுத்து மேட்டூர் வழியாக மாதேஸ்வரன் மலைக்கு இயக்கப்பட்டு வந்த தமிழக, கர்நாடக மாநில பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இரு தினங் களுக்குப் பிறகு நேற்று காலை மேட்டூரில் இருந்து மாதேஸ் வரன் மலைக்கு தமிழக பேருந்து உள்ளிட்ட வாகனப் போக்கு வரத்து தொடங்கியது. அதேநேரம் கர்நாடக மாநில பேருந்துகள் இயக்கப்படவில்லை. இரு மாநில எல்லையிலும், பதற்றம் நிலவுவதால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சாலை மறியல்
முன்னதாக, பழனியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மைசூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, பழனி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காரணமான கர்நாடக வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அதையடுத்து சேலம் சரக டிஐஜி வித்யாகுல்கர்னி, காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், துணை ஆட்சியர் அனீ்ஷ் சேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் சடலம், அடக்கம் செய்யப்பட்டது.
வனத்துறையினர் மீது வழக்கு
தமிழக - கர்நாடக எல்லையில் ஏற்பட்டுள்ள தொடர் பதற்றம் காரணமாக அப்பகுதியில் கர்நாடக மாநில தெற்கு சரக ஐஜி விஜயேந்திரகுமார் சிங் விசாரணை நடத்தினார். அப் போது அவர் கூறியது: வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த தாக பழனி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள், சோதனைச் சாவடியை உடைத்த கிராம மக்கள் என, தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.