தமிழகம்

வெற்றிப் பாதையில் தர்மயுத்தம் தொடரும்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

செய்திப்பிரிவு

எங்களுடைய தர்மயுத்தம் வெற்றிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று முன் னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித் துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார். முன்ன தாக சென்னை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுடைய தர்மயுத்தம் வெற்றிப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. டிடிவி தினகரனை எம்எல்ஏ-க்கள் சந் திப்பது பற்றி ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டேன். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செல்லும் எங்கள் அணி நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

SCROLL FOR NEXT