சிவகங்கை அருகே போலீஸாரை வாளால் வெட்டிய ரவுடி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ரவுடி தாக்கியதில் படுகாயமடைந்த 2 உதவி ஆய்வாளர்கள், 2 போலீஸார் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை வட்டம், பெரிய கோட்டை அருகே வைரவன் பட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் மகன் கார்த்திகைசாமி(27). இவர் மீது சிவகங்கை மாவட்டத்தில் 23 வழக்குகள், சென்னை, திருப்பூர், கோவை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 11 வழக்குகள் என 34 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஏற்கெனவே 2 முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சிவகங்கை அருகே நயினாங்குளம் அருகில் நேற்று அவர் போலீஸாரை வாளால் வெட்டியபோது போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேற்று முன்தினம் இரவு கார்த்திகைசாமி உட்பட 6 பேர், மதுரை விமான நிலையம் அருகே கூடக்கோவில் பெட்ரோல் நிலையத்தில் காரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல், பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து மதுரை மாவட்ட போலீஸார் அண்டை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சிவகங்கை மாவட்டத்தில் இரவு ரோந்து போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து தப்பி திருப்பாச்சேத்தி, படமாத்தூர் வழியாக கார் செல்வதாக தகவல் கிடைத்தது. சிவகங்கை நகர போலீஸார் வேல்முருகன், சிலம்பரசன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றனர். சித்தலூர் அருகே காயாங்குளத்தில் கார்த்திகைசாமி சென்ற காரை வழிமறித்ததில், அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த காவலர் வேல் முருகன் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதன்பின் டிஎஸ்பி மங்களேஸ் வரன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தர மாணிக்கம், கல்யாண்குமார் தலை மையில் போலீஸார் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, நயினாங்குளம் சுடுகாட்டுப் பகுதி புதருக்குள் காளையார்கோவில் இன்ஸ் பெக்டர் கல்யாண்குமார், உதவி ஆய்வாளர்கள் பூமிநாதன், சையது அலி தலைமையில் சென்ற போலீஸார் தேடினர்.
அப்போது, உதவி ஆய்வாளர் கள் பூமிநாதன், சையதுஅலி, போலீஸ்காரர் உடையணசாமி ஆகியோரை புதருக்குள் மறைந் திருந்த கார்த்திகைசாமி வாளால் வெட்டியுள்ளார். இதில் அவர் களுக்கு கையில் படுகாயம் ஏற்பட்டது. அப்போது தற்காப்புக் காக உதவி ஆய்வாளர் பூமிநாதன் துப்பாக்கியால் 2 முறை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த கார்த் திகைசாமியை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திகைசாமி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்த னர். இவ்வாறு அவர் கூறினார்.
தகவலறிந்த ராமநாதபுரம் சரக டிஐஜி கபில்குமார் சரட்கர் மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர் பாக சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்ற னர். சிவகங்கை வட்டாட்சியர் நாகநாதன் தலைமையில் வரு வாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி கார்த்திகைசாமியின் உடல் வைக்கப்பட்டுள்ள சிவகங்கை அரசு மருத்துவமனை வளாகத் தில் ஏராளமான போலீஸார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.