தமிழகம்

இயக்குநர் திருலோகச்சந்தர் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

செய்திப்பிரிவு

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், பல வெற்றிப் படங்களை இயக்கியவருமான ஏ.சி.திருலோகச்சந்தர் மறைவு செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தனிப்பட்ட முறையில் அவர என்னிடம் பற்றும் பாசமும் கொண்டவர்.

சுமார் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் 25 படங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தது. ஆஸ்கர் விருது தேர்வுக்குச் சென்ற தெய்வ மகன் படத்தை இயக்கியதும் இவரே.

திருலோகச்சந்தரின் மறைவு அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு மட்டுமல்லாத திரைப்படத் துறையினருக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT