தமிழகம்

டாஸ்மாக் விற்பனை சரிவை தடுக்க கடைகளில் 15 நாட்களுக்கு தேவையான மது வகைகளை இருப்பு வைக்க உத்தரவு

எம்.மணிகண்டன்

மதுக்கடைகளில் விற்பனை சரிவை தடுப்பதற்காக 15 நாட்களுக்கு தேவையான மது வகைகளை இருப்பு வைக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டதோடு அண்மையில் 500 கடைகளும் மூடப்பட்டன. இதனால், அரசுக்கு ரூ.6,636 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேர வையில் தெரிவித்தார். இந்நிலை யில், 500 கடைகள் மூடப்பட்டதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது, விற்பனையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை நடந்தது.

இதில் டாஸ்மாக் மாவட்ட, மண்டல மேலாளர்கள், கண் காணிப்பாளர்கள் கலந்துகொண் டனர். விற்பனை சரிவை ஈடுகட்ட, மதுபானக் கடையின் வரு வாய்க்கு ஏற்ப வழக்கத்தைவிட கூடுதலான அளவு மதுவகை களை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

தற்போது டாஸ்மாக் வருவாய் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.18 கோடி அளவுக்கு சரிந்துள்ளது. இதை ஈடுகட்ட விற்பனையை அதிகப்படுத்துவதற்கு தேவை யான நடவடிக்கைகளை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கெனவே உத்தரவிட்டது.

இது தொடர்பாக டாஸ்மாக் மண்டல, மாவட்ட அதிகாரிகள் கடந்த மாதம் ஆய்வு செய்தனர். அப்போது, பல கடைகளில் மது வகைகள் போதிய அளவு இருப்பு இல்லாதது, தேவையான மது வகைகள் இருப்பு இல்லாதது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக வருவாய் ஈட்டும் கடை களில் குறைந்தது 15 நாட்களுக்கு தேவையான மது வகைகளை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

வழக்கமாக ரூ.1 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் கடைகளில் ஒரு வாரத்துக்கு தேவையான மது வகைகள் மட்டும்தான் இருப்பு வைக்கப்படும். தற்போது, 15 நாட்களுக்கு தேவையான மது வகைகளை இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கூடுதல் விலை வைத்து மது விற்பனை செய்வதை தடுக்கவும் மாவட்ட, மண்டல அதிகாரிகளுக்கு டாஸ் மாக் நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT