தமிழகம்

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் நீரில் மூழ்கியதால் இறக்கவில்லை - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

செய்திப்பிரிவு

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தண்ணீரில் மூழ்கியதால் மாணவிகள் இறக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத் துவக் கல்லூரியில் படித்த மாண விகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 பேரும் சில தினங்களுக்கு முன்பு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, மாணவி மோனிஷாவின் தந்தை தமிழர சன், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மோனிஷாவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட் டது. இதையடுத்து, மற்றொரு மாணவி சரண்யாவின் தந்தை ஏழுமலையும் தனது மகளின் உடலை மீண்டும் பிரேத பரி சோதனை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஆர்.மாலா முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, மாணவிகளின் பிரேத பரி சோதனை அறிக்கைகளை சீலி டப்பட்ட கவரில் வைத்து நீதிபதி யிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அந்த அறிக் கையை மனுதாரர் தரப்பு வழக் கறிஞரிடமும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது எனக்கூறி, வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு கூறும் போது, ‘‘மாணவிகள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறக்க வில்லை என்றும், அவர்களின் உடலில் தண்ணீர் இருந்ததற் கான தடயங்கள் எதுவும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப் படவில்லை என்றும் அறிக்கையில் தெளிவாக உள்ளது. மேலும் அவர்களின் மூக்கில் ரத்தக்கட்டு காயம் உள்ளது. மூச்சுத்திணறல் ஏற்படுத்தியதால்தான் அவர்கள் இறந்துள்ளனர். ஆனால், போலீ ஸார் இதை தற்கொலை என வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் வாதம்’’ என்றார்.

SCROLL FOR NEXT