சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 7 காவல் உதவி ஆணையர்கள், 16 ஆய்வாளர் களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் காவல் உதவி ஆணையராக இருந்த என்.குமார் திருவொற்றி யூர் உதவி ஆணையராகவும், சிவகங்கை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த எஸ்.முரளிதரன் பண்ருட்டி டிஎஸ்பியாகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த எம்.ராமமூர்த்தி எஸ்பிசிஐடி டிஎஸ்பி யாகவும், சென்னை எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த எம்.தங்க ராஜ் கணேஷ் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், திருச்சி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் எஸ்.ரமேஷ் பாபு சென்னை எஸ்பிசிஐடி டிஎஸ்பியாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அதேபோல், மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த கே.சுப்பிரமணி திண்டுக் கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி கே.ஆனந்தகுமார் சென்னை வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் ஆய்வாளர்கள்
சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த டி.வீரக்குமார் ஆர்.கே.நகருக்கும், பட்டினப்பாக்கம் ஆய்வாளராக இருந்த பாலகிருஷ்ண பிரபு தண்டையார்பேட்டைக்கும், திருவொற்றியூர் ஆய்வாளராக இருந்த பி.ஜவஹர் வண்ணாரப் பேட்டைக்கும், மாதவரம் ஆய்வாளராக இருந்த அமல் ஸ்டேன்லி ஆனந்த் கொருக்குப் பேட்டைக்கும், துறைமுகம் ஆய்வாளராக இருந்த எஸ்.மோகன்ராஜ் ராயபுரத்துக்கும், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாள ராக இருந்த ஆப்ரகாம் குரூஸ் துரைராஜ் காசிமேட்டுக்கும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த எஸ்.சர வணபிரபு காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கும், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த சி.ரத்னவேல் பாண்டியன் கொடுங்கையூர் காவல் நிலையத் துக்கும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.மேலும், ஆர்கே. நகர், தண்டையார்பேட்டை, வண்ணாரப் பேட்டை, கொருக்குப் பேட்டை, ராயபுரம், காசிமேடு, மீன்பிடி துறைமுகம், கொடுங்கை யூர் காவல் நிலையங்களில் ஆய் வாளர்களாக இருந்தவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.