திருப்பூரில் தற்காலிக ஓட்டுநர் ஓட்டிய அரசுப் பேருந்து மோதியதில் இருச்சக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து சென்ற பெண் ஒருவர் பலியானார்.
திருப்பூர் நட்ராஜ் திரையரங்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து மத்திய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில், "தாராபுரம் போக்குவரத்துப் பணிமனையைச் சேர்ந்த பேருந்தை தற்காலிக ஓட்டுநர் கதிரவன் இயக்கினார். பேருந்து நட்ராஜ் திரையரங்கு அருகே வந்தபோது முன்னாள் சென்ற இருச்சக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இதில் இருச்சக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டுவந்த வைஜெயந்தி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். வாகனத்தை ஓட்டிவந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் காயமடைந்தார். பேருந்தை ஓட்டிய பள்ளி வாகன ஓட்டுநர் கதிரேசன் தலைமறைவானார்" எனத் தெரிவிக்கப்பட்டது.