2011 சட்டமன்றத் தேர்தலில் ராயபுரம்
வென்றவர்: டி. ஜெயக்குமார் (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 65099
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: R.மனோகர் (காங்)
பெற்ற வாக்குகள்: 43727
மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ராயபுரமும் ஒன்று. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான டி. ஜெயக்குமார் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
இந்த தொகுதி மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகள் ஓரளவுக்கும் மேம்படுத்தப் பட்டுள்ளது. போதுமான பனியாளர் நியமிக்கப் பட்டு மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, கழிவுநீர் மேலாண்மை, அரசு அதிகாரிகளின் செயல்பாடு, போக்குவரத்து கட்டமைப்பு முதலானவை ஒழுங்காக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் தொகுதி மக்களின் முக்கிய பிரச்சனையாக கூறுவது முறையற்ற குடிநீர் விநியோகம் மற்றும் மோசமான குப்பை மேலாண்மை. மின் விநியோகம் பல இடங்களில் சீராக இல்லை என்றே 59 சதவீத மக்கள் கூறுகின்றனர்.