ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப் பெயர்ச்சி ஆகிய மூன்றும் நேற்று ஒரே நாளில் வந்ததால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மாதந்தோறும் அமாவாசை யன்று விரதம் இருந்து, முன் னோருக்கு திதி கொடுப்பது இந்துக்களின் வழக்கம். ஆடி மாத அமாவாசை நாளில் ஆறு, குளம், கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வர். நேற்று ஆடி அமாவாசை என்பதால், சென் னையில் மெரினா கடற்கரை, மயிலை கபாலீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளக்கரை களில் ஏராளமானவர்கள் திரண்டு, எள், நீர் விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வீடுகளில் சிறப்பு படையலிட்டு வழிபட்டனர். முன்னோர் நினை வாக அன்னதானம், ஆடை தானம் வழங்கினர்.
நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவான், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு நேற்று காலை 9.27 மணிக்கு பெயர்ச்சி ஆனார். குருப் பெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி, திட்டை ஆகிய இடங்களில் உள்ள குரு பகவான் கோயில்களில் ஏராள மான பக்தர்கள் குவிந்து வழிபாடு செய்தனர்.
திருவலிதாயத்தில் ஹோமம்
அம்பத்தூர் அருகே உள்ள திருவலிதாயம் (பாடி), சென்னையின் குரு ஸ்தலமாக விளங்குகிறது. சிவபெருமானை குரு வழிபட்டு பாவ நிவர்த்தி பெற்றதன் காரணமாக இது குரு ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு ஜெகதாம்பிகை சமேத திருவல்லீஸ்வரர் கோயில் உள்ளது. இது தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 சிவாலயங்களில் ஒன்றாகும். சூரியன், சந்திரன், இந்திரன், இமயன், மகாவிஷ்ணு, ராமர், ஆஞ்சனேயர், பரத்வாஜ மாமுனிவர் ஆகியோரால் பூஜிக் கப்பட்ட திருத்தலம் என்றும் கருதப்படுகிறது.
குருப் பெயர்ச்சியை முன்னிட்டு, இங்கு நேற்று முன்தினம் காலை தொடங்கிய லட்சார்ச்சனை இன்று இரவு வரை நடைபெறுகிறது. குரு பகவான் நேற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தோஷ பரிகார ஹோமங்களும் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குரு பகவானையும், திருவல்லீஸ்வரர், ஜெகதாம்பி கையையும் தரிசித்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், பாரிமுனை கச்சாலீஸ்வரர் கோயில்களிலும் தட்சிணாமூர்த் திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
ஆடிப்பெருக்கு
ஆடி மாதம் 18-ம் நாளான நேற்று ஆடிப்பெருக்கு கொண் டாடப்பட்டது. இதையொட்டி, ஆறு, குளம் போன்ற நீர்நிலை கள் கொண்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் நேற்று அதிகாலையிலேயே அதிக அளவில் மக்கள் குவிந்தனர். திருமணமான பெண்கள், புத்தாடை உடுத்தி பழைய திருமாங்கல்யத் துக்கு பதிலாக புதிய மஞ்சள் கயிற்றில் புதிய திருமாங்கல்யம் அணிந்து வழிபாடு செய்தனர். திருமணம் ஆகாதவர்கள், மஞ்சள் சரடு அணிந்து பிரார்த்தனை செய் தனர். சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபட்டனர்.
ஒரே நாளில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப் பெயர்ச்சி வந்ததால் அனைத்து கோயில்க ளிலும் மக்கள் கூட்டம் அலை மே ாதியது. கோயில்களில் தடுப்பு கள் அமைக்கப்பட்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமானோர் குவிந்ததால் திருவல்லிக்கேணி, திருவான்மியூர் , மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.