மதுரையில் சிறுமியை பலாத்காரம் செய்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செக்காணூரணி பகுதியைச் சேர்ந்தவர் கே.மோகன் பிரகாஷ் (24). இவரது நண்பர் டி.ஜெயப்பிரகாஷ்.
ராணுவ வீரரான மோகன் பிரகாஷ் ஊரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தனியாக இருந்த 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். மாணவியை தனிமையான இடத்திற்கு வலுகட்டாயமாக கடத்திச் செல்ல ஜெயப்பிரகாஷ் உதவியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டில் படிப்பதற்கு போதிய வெளிச்சம் இல்லாததால் தினமும் இரவு தனது தந்தை இரவு காவலராக பணிபுரியும் மண்டபத்தில் சிறிது நேரம் தங்கி படித்துச் செல்வார். சம்பவத்தன்று மாணவி திருமண மண்டபத்தில் தனியாக இருந்துள்ளார். இதைப் பயன்படுத்தி மோகன் பிரகாஷ் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு, ஜெயப்பிரகாஷ் உதவியுள்ளார்.
மோகன் பிரகாஷ், மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.