சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவியல், டிஜிட்டல் இன்டர்மீடியேட், ஆடியோகிராபி, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, அனிமேஷன் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப் படிப்புகள் (பேச்சிலர் ஆப் விஷுவல் ஆர்ட்ஸ்) வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2016-17) சேர மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்களை தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) இருந்து 12-ம் தேதி (இன்று) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.