தமிழகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன் கட்டப்பட்ட அனுமதியில்லாத, விதி மீறல் கட்டிடங்களை சட்டத்துக்குட்பட்டு வரன்முறைப்படுத்த விதிகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் நகர்ப்புறங்களில் குறைந்த அளவே நிலங்கள் இருப்பதால், விலை மிகவும் அதிகரித்துள்ளதுடன், அனுமதி யற்ற கட்டிடங்களும் பெருகியுள்ளன. இதற்கு, சிறிய அளவிலான மனைகளில் அதிக பரப்பளவில் கட்டிடம் கட்டி வசிக்கவும் மற்றும் வணிக உபயோகங்களுக்கு பயன் படுத்துவதே காரணம். இதை கருத்தில் கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அமலாக்க நடவடிக்கைகளுக் காகவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம், மாநிலத்தில் மிக அதிக அளவில் அனுமதியற்ற விதிமீறல் கட்டிடங்கள் இருப்பதால், அவை அனைத்தையும் இடிப்பதும் சாத்தியமில்லை. இடித்தால் நகர்ப் பகுதிகளில் மக்களுக்கு வீடுகள், வணிகப் பகுதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்க நேரிடும்.
இதை கருத்தில்கொண்டு, தமிழக அரசு 2007 ஜூலை 1-ம் தேதி அல்லது அதற்கு முன் கட்டப்பட்ட விதிகள் மீறிய அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு, சில நியாயமான வரம்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு குந்தகம் விளைவிக்காமல், நடைமுறை சாத்தியக் கூறுகள் அடிப்படையில் விலக்களிக்கப்படுகிறது.
இதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டு தல்களை பரிந்துரைக்க நீதிபதி ராஜேஸ் வரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. நீதிபதி ராஜேஸ்வரன் குழுவின் பரிந்துரைகள் கடந்த 13-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு, இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. இவ்விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்:
* கட்டிடம் 2007 ஜூலை 1 அல்லது அதற்கு முன் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
* விமான போக்குவரத்து அமைச் சகம், கடலோர பகுதி, விமான படைத் தளம், ராணுவம், மலையிடப்பகுதி பாதுகாப்பு, தமிழ்நாடு நியூக்ளியர் நிறுவுதல் விதிமுறைகளுக்கு உடன் பட்டதாக இருக்கவேண்டும்.
* பொது இடப்பகுதிகள், சாலைகள், தெருக்கள், அரசு, உள்ளாட்சி நிறுவனங் களுக்கு சொந்தமான இடங்கள், நீர்நிலை கள், முழுமைத் திட்டம் அல்லது விரிவான வளர்ச்சி திட்டம் அல்லது புதுநகர் வளர்ச்சித் திட்டம், பூங்கா மற்றும் விளை யாட்டு திடலுக்காக ஒதுக்கிய திறந்த வெளிப் பகுதி போன்ற இடங்களில், கட்டிய கட்டிடங்கள் இத்திட்டத்தின்கீழ் வரன்முறை செய்யப்படாது.
* சென்னைப் பெருநகர் பகுதியில் நிலத்தடி நீர் பிடிப்பு பகுதி மற்றும் செங்குன்றம் நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த முடியாது.
* தேவையான சாலை அகலம், பக்க இடைவெளி, தளப்பரப்பு குறியீடு, வாகன நிறுத்துமிடம் மற்றும் திறந்தவெளி பகுதி போன்றவை குறித்த விதிவிலக்குகள், தீப்பாதுகாப்பு மற்றும் கட்டிட உறுதித் தன்மைக்குட்பட்டு, நீதிபதி ராஜேஸ்வரன் குழு பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது.
* இத்திட்டத்தில் தங்களுடைய கட்டிடங் களை வரன்முறைப்படுத்த விரும்புவோர் வழக்கமான வளர்ச்சி கட்டணம், கூடுதலாக உள்ள தளப்பரப்பு குறியீடு களுக்கு ஊக்க தளப்பரப்பு குறியீட்டு கட்டணம், வாகன நிறுத்துமிட குறைபாடு கட்டணம், திறந்தவெளிப்பகுதி விதிமீறல்களுக்கான கட்டணங்கள் செலுத்தவேண்டும். மேலும், வரன்முறைப்படுத்து வதற்கான அபராத தொகையை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் (Infrastructure and Amenities charge) கட்டணத்தின் குறிப்பிட்ட சதவீத அடிப்படையில், கூடுதலான தளப்பரப்பு குறியீட்டுக்கு ஏற்றவாறு செலுத்தவேண்டும்.
* 2007 ஜூலை 1-ம் தேதி அல்லது அதற்கு முன் அனுமதியின்றி, விதிமீறல்களுடன் கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள், அபிவிருத்தியாளர்கள் கட்டிடங் களை வரன்முறைப்படுத்த, கட்ட ணங்களை சுயமதிப்பீடு செய்து, விதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் கட்டாயம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
* இத்திட்டத்தின்கீழ் வரன் முறைப்படுத்த தகுதியற்ற கட்டிடங் களின் குடிநீர், கழிவுநீர், வடிகால் இணைப்புகள் மற்றும் மின் இணைப்பு களை துண்டிக்கவும், கட்டிடங்களை பிற நபருக்கு விற்க தடை செய்யும் வகையிலும், உரிய துறைகள் தத்தம் சட்டம் மற்றும் விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யும்.
எனவே, விதிமீறிய கட்டிடங்கள் தொடர்பாக, 6மாத காலத்துக்குள் இணைய வழியில் விண்ணப்பித்தல் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மிக அதிக அளவில் அனுமதியற்ற விதிமீறல் கட்டிடங்கள் இருப்பதால், அவை அனைத்தையும் இடிப்பதும் சாத்தியமில்லை. இடித்தால் நகர்ப் பகுதிகளில் மக்களுக்கு வீடுகள், வணிகப் பகுதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழக்க நேரிடும்.