ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி திருச்சி, மதுரை, தேனியைச் சேர்ந்த பட்டதாரிகளிடம் பல லட்சம் மோசடி செய்ததாக புதுச்சேரி தனியார் நிறுவனம் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சி.சி.சி. என்ற பெயரில் முல்லைநாதன் என்பவர் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் ஆன்லைன் நிறுவனம் நடத்தி வந்தார். இதனை நம்பி திருச்சி, மதுரை, தேனியைச் சேர்ந்த பல இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். நேர்முகத் தேர்வுக்கு பிரமிளா என்பவர் இவர்களுக்கு அழைப்பு விடுத்துள் ளார்.
நேர்முக தேர்வுக்கு பிறகு வெளிநாட்டில் வேலை பெற விசா, டிக்கெட் எடுக்க ஒவ்வொரு இளைஞரிடமும் தலா ரூ.6 லட்சம் வரை முல்லைநாதன் பெற்றுள் ளார். சில மாதங்களில் பணம் கொடுத்தவர்களுக்கு விசா, பணி ஆணை, விமான டிக்கெட் வந் துள்ளன. இவற்றை எடுத்துக் கொண்டு விமான நிலையம் சென்ற இளைஞர்களுக்கு அனைத்தும் போலி என தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தொடர்புகொண்ட போது எந்த பதிலும் கிடைக்க வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் புதுச்சேரி சீனியர் எஸ்பி ராஜீவ் ரஞ்சனிடம் புகார் அளித்தனர். இந்த வழக்கை புதுச்சேரி சிபிசிஐடி மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சீனியர் எஸ்பி ராஜீவ் ரஞ்சன் உறுதி அளித்தார்.