தமிழகம்

பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கிலப் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

செய்திப்பிரிவு

பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஆங்கில மொழிப் பயிற்சி வரும் செப்டம்பர் 11-ம் தேதி தொடங்க வுள்ளது. இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன.

பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில மொழி மையம் தேவைக்கேற்ப பயிற்சிகளை வழங்கி வருகிறது. பயிற்சியில் சேருபவர்களின் தற் போதைய மொழித் திறனை அறிந்து பயிற்சி அளிக்க ஏதுவாக தகுதி நிலை சோதனை நடத்தி அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். தொடக்க காலத்தில் விண்ணப் பிப்பவர்களுக்கு தேர்வு செய்த பயிற்சி மற்றும் விரும்பிய நேரம் கிடைக்கும்.

பொது ஆங்கிலம், ஆங்கில உரையாடல், வணிக ஆங்கிலம், IELTS தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆகியவற்றில் 16 வய துக்கு மேற்பட்டோர் சேரலாம். அதேபோல குழந்தை களுக்கான பயிற்சியும் தொடங் கப்பட்டுள்ளது. இளம் சாதனையாளர்கள் பயிற்சி 7 முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கும், பேசுதல் மற்றும் சரியாக எழுதும் பயிற்சி 11 முதல் 15 வயது வரை உள்ள சிறார்களுக்கும் வழங்கப்படும்.

முன்பதிவுக்கு 01204569000/ 01206684353 ஆகிய எண்களிலோ, winya.suzanna@in.britishcouncil.org என்ற இ-மெயில் மூலமே தொடர்பு கொள்ளலாம். Engish என டைப் செய்து 567678 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்யலாம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT