மழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கக் கோரி வெளியிட்ட அறிக்கை வெற்று அறிக்கையா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மழை நிவாரணப் பணிகள் குறித்து நான் எழுப்பிய கேள்வி களுக்கு, அதிகாரிகளை யெல்லாம் அழைத்து விவாதித்துவிட்டு, 2 நாட்கள் கழித்து அரசியல் ஆதாயத் துக்காக கருணாநிதி வெற்று அறிக்கை வெளியிடுகிறார் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி யுள்ளார்.
தமிழகத்தில் இம்மாதம் 17-ம் தேதி மழை ஆரம்பித்தது. ஒரு வாரம் கழிந்த பின்னும் நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை என்று கூறியிருந்தேன். பிறகு 20 மாவட்டங்களுக்கு உயர் அதிகாரி கள் அனுப்பப்பட்டு வெள்ளப் பகுதிகளைப் பார்வை யிட்டதாக பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவர்களை நியமனம் செய்த அறிவிப்பே 25-ம் தேதிதான் வெளி யானது. நான் அறிக்கை வெளியிட்ட பிறகே வெள்ளப் பணிகளைப் பார்வையிட அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றனர். அவர் களை பொதுமக்கள் முற்றுகையிட் டதால் திரும்பி வந்தது நாளிதழ் களில் வெளியாகியுள்ளது.
வெள்ளப் பகுதிகளைப் பார்வை யிட முதலமைச்சர் வருவார் என்று எதிர்பார்த்திருந்த மக்களை ஓ.பன்னீர்செல்வம் சென்று பார்த்தாரா? சென்னையில் சாலை யில் உள்ள பள்ளத்தில் விழுந்து குண சேகரன் என்பவர் இறந்து விட்டதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இதுதான் சென்னை மாநகராட்சியின் 3 ஆண்டு கால சாதனையா?
மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்று தெரிவித்த யோசனையை வெற்று அறிக்கை என்றும் குற்றச் சாட்டுகள் கூறுவதை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். அவருடைய ‘அம்மா’வே இப்படி பல ஆணை களைப் பிறப்பித்தும், தமிழக மக்களின் நலனுக்காக நான் குரல் கொடுப்பதை, அறிக்கை விடுவதை 75 ஆண்டுகளாக நிறுத்த வில்லை என்கிறபோது இவருடைய ஆணைக்கா கட்டுப்படுவேன்?
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.