தமிழகம்

ராமேசுவரம்-பாலக்காடு இடையே விரைவில் ரயில் சேவை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்- பாலக்காடு ரயில் விரைவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி தெரிவித்துள்ளார்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மண்டபத்துக்கும், பாம்பனுக்கும் இடையில் 2 1/4 கி.மீ. தொலைவுக்கு பாம்பன் ரயில் பாலம் அமைந்துள்ளது. தற்போது இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி தலைமையிலான குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பொது மேலாளர் வசிஷ்டா ஜோரி கூறியதாவது:

பாம்பன் ரயில் பாலம் கடல் காற்றில் அடிக்கடி துரு பிடிப்பதால் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிதாக பாம்பன் பாலம் கட்டுவதற்கான திட்டம் ஏதும் கிடையாது. தற்போது ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு மீண்டும் தண்டவாளங்கள் அமைப்பதற்கான திட்டங்கள் ஏதும் இல்லை. பாலக்காடு- ராமேசுவரம் பயணிகள் ரயில் விரைவில் இயங்கத் தொடங்கும் என அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT