தமிழகம்

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் நீதித்துறை உறுப்பினர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் வழக்குகள் தேக்கம்: 13 மாவட்டங்களைச் சேர்ந்த நுகர்வோர் அவதி

க.சக்திவேல்

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தின் நீதித்துறை உறுப்பினர் களின் பணிக்காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது வரை புதிதாக யாரும் நியமிக்கப் படவில்லை. இதனால், ஆணையத் தின் மதுரை கிளையில் நூற்றுக் கணக்கான வழக்குகள் தேக்க மடைந்துள்ளதோடு, உரிய நிவா ரணம் கிடைக்காமல் 13 மாவட்டங் களைச் சேர்ந்த நுகர்வோர் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 30 மாவட்டங்களில் நுகர்வோர் நீதிமன்றங்கள் செயல் பட்டு வருகின்றன.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரையிலும் இயங்கி வருகின்றன. நிவாரணத் தொகை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ள வழக்குகள் மற்றும் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின் மேல் முறையீட்டு வழக்குகள், மாநில நுகர்வோர் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டப் படி நுகர்வோரின் புகார் மனு அல்லது மேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வேண்டும். மாநில நுகர் வோர் ஆணையமானது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை தலைவராகவும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் இருவரை நீதித்துறை உறுப்பினர்களாகவும், ஒரு ஆண், பெண் உறுப்பினர் களைக் கொண்டும் செயல்பட வேண்டும்.

இந்நிலையில், ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த 2015 மே மாத இறுதியில் காலியானது. அந்த பதவிக்கு ஓராண்டுக்கும் மேலாக யாரும் நியமிக்கப்படாத நிலையில், கடந்த 2016 டிசம்பர் மாதம் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.தமிழ்வாணன் நியமிக்கப்பட் டார். இந்நிலையில், மாநில நுகர் வோர் ஆணைய நீதித்துறை உறுப் பினர்களின் பணிக்காலமும் கடந்த 2015 ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த பதவிகளுக்கு தற் போதுவரை யாரும் நியமிக்கப்பட வில்லை.

இதனால், சென்னையில் மட் டுமே வழக்கு விசாரணை நடை பெற்று வருகிறது. மதுரை கிளை யில் வழக்கு விசாரணை நடைபெறு வதில்லை. அங்கு மட்டும் 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து, நுகர்வோர் நீதி மன்ற வழக்கறிஞர் எம்.பிறவி பெருமாள் கூறியதாவது:

நுகர்வோர் ஆணையத்தின் மதுரை கிளையைப் பொருத்த வரை 13 மாவட்டங்கள் அதன் கட்டுப் பாட்டில் வருகின்றன. ஒரு வழக்கை நடத்த வேண்டுமெனில், ஒரு அமர் வில் நீதித்துறை உறுப்பினர் கட்டா யம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 2 நீதித்துறை உறுப்பினர் பணியிடங்களும் நிரப்பப்படாத தால், ஆணையத்தின் தலைவரைக் கொண்டு சென்னையில் மட்டும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

2 ஆண்டுகளுக்கும் மேலாக

மதுரை கிளையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேக்கம் அடைந்துள்ளன. இத னால், 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிவாரணம் கிடைக்காமல் நுகர் வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நுகர் வோரின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில நுகர்வோர் ஆணைய நீதித்துறை உறுப்பி னர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT