எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபாவுக்கு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கக் கோரி உள்துறை அமைச்சகத்திடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இதற்காக அந்தப் பேரவையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் களான பசும்பொன் பாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப் பினர் சரஸ்வதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரது அலுவலகத்திற்கு நேற்று நேரில் சென்று தீபா சார்பாக மனு அளித்தனர். அந்த மனுவில் தீபாவுக்கு மத்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த குழுவினர் தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க உள்ளனர். அப்போது ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான புகார் மனுவும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் சமர்ப்பிக்க உள்ளனர்.