தமிழகம்

அதிமுக மீது நடவடிக்கை கோரி திமுக மனு

செய்திப்பிரிவு

அதிமுகவினர் மீதான தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை அலுவலக வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக சார்பில் மார்ச் 15 முதல் 28 வரை 6 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கடலூரில் அமைச்சர் சம்பத், கோயம்புத்தூரில் மேயர் வேலுச்சாமி சம்பந்தப்பட்ட சம்பவங்கள் உள்பட 6 புகார் களுக்கும் ஆதாரங்கள் இணைத்தே தரப்பட்டுள்ளன. இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT