ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதை எதிர்த்து நாளை (செவ்வாய்க்கிழமை) தனியார் பொறியியல் கல்லூரிகளை மூடும் முடிவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் நாளை தனியார் பொறியியல் கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு செயலாளர் செல்வராஜ் திருச்சியில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். மாணவர்கள் நலனை கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேபோல், தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் நாளை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. | விரிவான செய்திக்கு> 'தனியார் பள்ளிகளுக்கு விடுப்பு இல்லை; ஜெயலலிதா ஆதரவு போராட்டம் உண்டு'