தமிழகம்

மின்வெட்டு பிரச்சினை: ஜெ. குற்றச்சாட்டுக்கு கருணாநிதி மறுப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகள் தான் காரணம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று கூறுகையில்: தமிழகதில் மின் நிலைமையை சீர் செய்ய பல்வேறு திட்டங்கள் மூலம் 7,798 மெ.வா மின்சாரம் பெறுவதற்கான முயற்சிகள் திமுகவால் மேற்கொள்ளப்பட்டன.

2006-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மேட்டூர் துணை அனல் மின் நிலையம், வட சென்னை மற்றும் உடன்குடி அனல் மின் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

மேலும், கடந்த 2007-ல் தமிகத்தில் இருந்து மின்சாரம் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு விற்கப்பட்டதாக, அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் பேசியிருக்கிறார். மின்சாரத்தை வெளிமாநிலத்திற்கு விற்க வேண்டும் என்றால் தமிழகத்தில் உபரியாக மின்சாரம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது ஜெயலலிதா எப்படி திமுக ஆட்சியின் காரணமாக மின் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

திங்கள் கிழமையன்று 14-வது நிதிக் குழு உறுப்பினர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியால் தான் தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. அதுவும் குறிப்பாக 2007 முதல் 20011 மே மாதம் வரை மின் தட்டுப்பாடு நிலவியதாக தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT