தமிழகம்

பரிசோதகர் தேர்வுக்கு பிப்.9-ல் சான்றிதழ் சரிபார்ப்பு

செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ. ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தொழில்கள் சார்நிலைப் பணியில் அடங்கிய பரிசோதகர், உதவி பரிசோதகர் பதவிகளில் 6 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜுன் மாதம் 25-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

அத்தேர்வில் 236 பேர் கலந்துகொண்டனர். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 16 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT