தமிழகம்

20 நாட்களுக்குப் பிறகு ஓசூருக்கு கர்நாடக பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

20 நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் கர்நாடக பதிவெண் கொண்ட தனியார் பேருந்துகள் ஓசூர் வரை நேற்று முதல் இயங்கத் தொடங்கின.

காவிரி பிரச்சினையைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரு நகருக்கு கடந்த 5-ம் தேதி முதல் அரசுப் பேருந்து கள், லாரிகள், கார்கள் உள் ளிட்ட வாகனங்கள் இயக்கப் படவில்லை. இந்நிலையில் நேற்று கர்நாடக பதிவெண் கொண்ட தனியார் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கப்பட்டன. இதில், சில பேருந்துகள் ஓசூர் - பெங்களூரு நெடுஞ்சாலையில் அத்திப்பள்ளி வழியாக சென்று வருகின்றன. சில பேருந்துகள் பள்ளூர், பாகலூர் வழியாகச் சென்று வரு கின்றன. இதனால் பெங்களூரு வில் பணிபுரியும் தமிழக தொழி லாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

SCROLL FOR NEXT